Web Ads

இந்த வாரம் ஓடிடி. தளத்தில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் தமிழ், தெலுங்கு, மாலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம்.

* தெலுங்கு திரைப்படமான ‘ஏஜெண்ட்’ இயக்குநர் சுரேந்தர் ரெட்டியால் இயக்கப்பட்டுள்ளது. இதில், மம்முட்டி, சாக்சி வைத்யா, அகில் அக்கினேனி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் மற்றும் திரில்லராக உருவாகிவுள்ள இப்படம் சோனி லைவ் ஓடிடி-யில்  வெளியாக உள்ளது.

* கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘காதல் என்பது பொதுவுடைமை’. இப்படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார். தன்பாலின ஈர்ப்பாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ஓடிடி-யில் வெளியாகி உள்ளது.

* இயக்குநர் குணா சுப்பிரமணியன் இயக்கத்தில் நடிகர் நடராஜன் நடித்துள்ள திரைப்படம் ‘சீசா’. திரில்லர் கதைக்களத்தை கொண்டுள்ள இப்படம் ஆஹா ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

* கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 2கே லவ் ஸ்டோரி. இப்படம்  அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

* நானா படேகர் நடிப்பில் அனில் சர்மா இயக்கிவுள்ள திரைப்படம் vanvaas. இப்படம் ஜீ5 பிரீமியம் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

list of movies releasing on ott this week