
ரவிமோகன் இயக்கத்தில் யோகிபாபு ஹீரோ: பிரபலங்கள் வாழ்த்து..
நடிகர் மற்றும் “இயக்குனர்” ரவிமோகன் பற்றிய அப்டேட் காண்போம்..
தமிழ் சினிமாவில் காலம் கடந்து எடுத்தாலும், ரவிமோகனின் மாற்றங்கள் ஆக்கப்பூர்வமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயரை மாற்றினார். வில்லனாக நடிக்க தீர்மானித்துள்ளார். தற்போது அண்ணன் ராஜாவைபோல டைரக்டராகவும் களம் இறங்கியுள்ளார் ஜெயம் ரவி என்ற பெயரை மாற்றியுள்ள ரவிமோகன்.
ரவி மோகன் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ யார் என்பது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
இந்நிலையில் கோமாளி, காதலிக்க நேரமில்லை, சைரன் போன்ற படங்களில் ஜெயம் ரவியுடன் யோகிபாபு நடித்துள்ளார். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் புரொமோஷன் பணிகளில், ‘நான் இயக்கும் படத்தில் யோகிபாபு தான் ஹீரோ’ என ரவி மோகன் தெரிவித்தார். அப்போது அவரது பேச்சு ஏதோ நகைச்சுவையாக பேச்சாக கருதப்பட்டது.
ஆனால், உண்மையாகவே யோகிபாபு தான் ஹீரோ என கூறப்படுகிறது. அதற்கான கதையை ரவி மோகன் எழுதி முடித்து ஷூட்டிற்கும் ஆயத்தமாகி வருகிறார்.
தொடர் தோல்வியை சந்தித்து வரும் ரவி மோகன் இயக்குனராக வெற்றி பெற்று புதிய பயணத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி மோகன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்து வரும் பராசக்தி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் கணேஷ் பாபு இயக்கி வரும் கராத்தே பாபு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், யோகிபாபு தெரிவிக்கையில்,
‘மற்ற படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன். இப்படங்களை முடித்த பின்பு சில மாதங்களில் ரவிமோகன் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வரும்’ என்றார்.
இதில், தமிழ்த்திரை பிரபலங்களின் வியப்பு என்னவென்றால், ஹீரோவாக நடித்தவர்கள் டைரக்டராக அறிமுகும் ஆகும்போது பெரிய நடிகர்களை வைத்து இயக்கவே விரும்புவார்கள். ஆதலால் ரவி மோகன் எடுக்கும் முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அப்படியே, இவரது அண்ணன் ராஜாவும் ஒரு மாற்றத்திற்காக ஹீரோவாகவும் நடிக்க வரலாம் எனவும் நெட்டிசன்களால் குறும்புடன் பதிவிடப்படுகிறது.
