பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Leaked List of BB5 Contestants : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியை இதுவரை நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு பல சர்ச்சைகள் எழுந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் வெகு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக செட் அமைக்கும் பணிகள் பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இன்றைய ராசி பலன்.! (5.7.2021 : திங்கள் கிழமை)

மேலும் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளவர்கள் யார் யார் என்பது குறித்தும் லிஸ்ட் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியை சார்ந்த சிவாங்கி, அசிம், தர்ஷா குப்தா, கனி, சுனிதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் நடிகர் ராதாரவி, நடிகை ராதா, பூணம் பாஜ்வா, நகுல் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையில் இவர்களில் யார் யார் போட்டியாளர்களாக பிக் பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சங்கீதா அக்கா Life Time Support – புகைப்படத்தை பகிர்ந்த Atlee மனைவி Priya..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.