பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படத்தின் மாபெரும் சாதனை

நடிகர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள இந்த படம், தற்போது 100 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம், தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் ஓடிடியில் வெளியானதிலிருந்து தொடர்ந்து அதிகமான பார்வையாளர்களால் கண்டு ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்த சாதனை குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர். லெஜண்ட் சரவணனின் திரைப்பயணத்தில் ‘லீடர்’ திரைப்படம் முக்கியமான வெற்றிப்படமாக பார்க்கப்படுகிறது. ஓடிடி தளத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ள இந்த சாதனை, படத்திற்கு கிடைத்திருக்கும் ரசிகர் ஆதரவின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
இதன் மூலம், ‘லீடர்’ திரைப்படம் ஓடிடி உலகிலும் தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான ‘லீடர்’ திரைப்படத்தில் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாயல் ராஜ்புத் நடித்துள்ள நிலையில், ஷாம், ஆண்ட்ரியா ஜெரெமையா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லெஜண்ட் சரவணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த திரைப்படம், கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஓடிடி தளத்திலும் சாதனைப் பயணத்தை தொடர்கிறது.
View this post on Instagram