விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடி இருக்கா இல்லையா என்பது குறித்து படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

Latest Updates on Vikram Movie : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த இவர் சில பிரச்சனைகளால் அந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

அசாத்திய தைரியம், போராளி, ஹீரோன்னா முகமது ரிஸ்வான்தான் : வைரலாகிறது நிகழ்வு

விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2 கட்டங்களை நிறைவு செய்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் கமலுக்கு இந்த படத்தில் ஜோடி இருக்கிறதாம். அவருடைய கதாபாத்திரம் தான் கதையின் மையக்கரு என கூறப்படுகிறது. அதற்காக முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

கனமழையிலும் வசூல் சாதனை படைத்த Annaatthe – இத்தனை கோடி லாபமா? | Rajinikanth, Nayanthara, Siva | HD

மேலும் இந்த படம் கோடை விடுமுறை கொண்டாட்டமாக ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.