Latest Fan-made Poster of Master

முரட்டுத்தனமான லுக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து இருக்கும் மாஸ்டர் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Latest Fan-made Poster of Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்த படத்தின்சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்திருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த உற்சாகத்துடன் சேர்ந்து மற்றொரு கொண்டாட்டமாக படத்தின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முரட்டுத்தனமான லுக்கில் இருக்கும் ஃபேன் மேட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.