பரத் நடிப்பில் வெளியான லாஸ்ட் 6 ஹவர்ஸ் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவரது நடிப்பில் சுனிஷ் குமார் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் லாஸ்ட் 6 ஹவர்ஸ்.

இந்தப் படத்தில் பரத்துடன் அனூப் காலித், விவியா சாந்த், அடில் இப்ராஹிம், அனுமோகன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

பரத்துக்கு வெற்றியா? தோல்வியா? - லாஸ்ட் 6 ஹவர்ஸ் விமர்சனம்

கதைக்களம் :

ஒரு ஊரின் மத்தியிலுள்ள பெரிய பங்களாவில் நான்கு கொள்ளையர்கள் சேர்ந்து கொள்ளையடிக்கின்றனர். இந்த நான்கு திருடர்களில் ஒருவர் ஆஸ்துமா நோயாளியாக இருக்கிறார். திட்டம் போட்டு திருடிய இவர்கள் அடுத்ததாக ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு பழைய பங்களாவில் 20 கோடி ரூபாய் பணம் இருப்பதாக தெரிய வர அந்த பங்களாவில் கொள்ளையடிக்க கிளம்புகின்றனர்.

பங்களாவுக்குள் சென்று பார்த்த போது அங்கு கட்டு மஸ்தான உடலமைப்போடு பரத் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் பரத்துக்கு கண்பார்வை தெரியாது காதுகளை கண்களாக பயன்படுத்தி கொள்ளையர்களிடம் சண்டையிட இதில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கொள்ளையன் கொல்லப்படுகிறான். அடுத்து நடந்தது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

பரத்துக்கு வெற்றியா? தோல்வியா? - லாஸ்ட் 6 ஹவர்ஸ் விமர்சனம்

படத்தைப் பற்றிய அலசல் : நீண்ட இடைவெளிக்கு பிறகு பரத் தாறுமாறான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார். அவருடைய திரைப்படத்தில் இந்த படம் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என சொல்லலாம்.

கொள்ளையர்களாக நடித்துள்ள அனூப் காலித், விவியா சாந்த், அடில் இப்ராஹிம், அனுமோகன் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. படத்தின் பின்னணி இசை பலம் சேர்க்கிறது.