Kushi Kapoor Meet Ajith : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

Kushi Kapoor Meet Ajith :

நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்தை தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் குஷி கபூர் சென்று சந்தித்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

வேற லெவலில் டிரெண்டாகும் விஜய் சேதுபதி பட போஸ்டர் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே!

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இது ஒருபக்கமிருக்க நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்தை தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் குஷி கபூர் சென்று சந்தித்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

குஷி கபூருடன் அஜித் கேஷுலாக பேசிக் கொண்டிருக்கும் அந்த புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.