கடைசி உலகப் போர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் என முன்னேறிக் கொண்டே வருபவர் ஹிப் ஹாப் ஆதி.
இவர் மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பரிவு ,வீரன், பிடி சார், போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். குறிப்பாக இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கடைசி உலகப் போர் என்ற படத்தை இவரை இயக்கி நடித்து நேற்று வெளியானது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் நடராஜன் சுப்பிரமணியம், அனகா, நாசர், முனிஸ் காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் முதல் நாளில் 50 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.