கவர்ச்சி கடல் நடிகையை பிக் பாஸ் போட்டியாளராக களம் இறக்குகிறது விஜய் டிவி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன் முடிவடைந்துள்ள இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கவர்ச்சி கடல் நடிகையை களத்தில் இறக்கும் விஜய் டிவி.. பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியான பரபரப்பு லிஸ்ட்

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சி போட்டியாக ரக்சன், தர்ஷா குப்தா, திவ்யதர்ஷினி, பாடகி ராஜலட்சுமி, இமானின் முதல் மனைவி மோனிகா ஜான், ஷில்பா மஞ்சுநாத், பாடகி சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார், டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் வனிதாவின் முன்னாள் காதலரான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இந்த நிகழ்ச்சி பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர்கள் மட்டுமல்லாமல் கவர்ச்சி கடலாக வலம் வரும் நடிகை கிரண் ரத்தோடு இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கவர்ச்சி கடல் நடிகையை களத்தில் இறக்கும் விஜய் டிவி.. பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியான பரபரப்பு லிஸ்ட்

இதனால் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.