கேஜிஎஃப் படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

KGF Actor Yash Next Movie : கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். கேஜிஎப் என்ற படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான இவர் தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை ஜூலை 16ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது யாஷ் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎப் படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் யாருடைய இயக்கத்தில் நடிக்கிறார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்

அதாவது தெலுங்கு மகேஷ்பாபுவை வைத்து போக்கிரி மற்றும் பிசினஸ் மேன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.