
நடிகர் தனுஷின் வாத்தி படத்தில் இளம் நடிகர் இணைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
Ken Karunas Joined in Vaathi Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான மாறன் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடங்கி தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி என்பவர் இயக்குகிறார். தற்போது இந்தப்படத்தின் அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்த கென் கருணாஸ் இணைந்துள்ளார்.

இவர் படத்தின் இயக்குனர் உடனிருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ள கென் கருணாசுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.