Pushpa 2

எங்கள் பதினைந்து வருட காதலுக்கு, அந்த சூரியனே சாட்சி: கீர்த்தி சுரேஷ் பதிவு

‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பது போல, நடிகை கீர்த்தியின் காதலும் பெரிதாகவே இருக்கிறது. ஆம், இது குறித்து அவரே வெளியிட்ட பதிவை பார்ப்போம்..

32 வயதாகும் கீர்த்தி சுரேஷ், தனது பள்ளிக்காலத்து நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து, பின்னர் அவரையே திருமணமும் செய்து கொள்ள இருப்பதாக வலைதள தகவல்கள் தொடர்கின்றன.

ஆண்டனி தட்டில் என்பவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர். ஆனால், சொந்த ஊர் கேரளா. இவருக்கு கேரளா மற்றும் துபாயில் கோடிக்கணத்தில் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

கைபாலத் ஹபீப் ஃபரூக்குடன் சேர்ந்து, சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆஸ்பெரோஸ் விண்டோ சொல்யூஷன்ஸின் முதன்மை உரிமையாளராக உள்ளார். கீர்த்தி சுரேஷ் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குணாதிசயம் கொண்டவர். ஆனால், ஆண்டனி தட்டில். கூச்ச சுபாவம் கொண்டவர் என கூறப்படுகிறது. ஆதலால் தான், இருவரும் வெளியில் ஒன்றாக சுற்றியது கூட கிடையாதாம்.

சிறு வயது முதலே நண்பர்களாக இருந்து வந்த நிலையில், கொச்சியில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்தபோது தான் நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக பொத்திப் பொத்தி வளர்த்து வந்த காதலை, தற்போது வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். இது குறித்து கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில், போட்டோ ஒன்றையிட்டு கூறியிருப்பதாவது:

இருவரும் பின்புறமாக திரும்பி சூரியனை பார்ப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, ’15 வருடம் மற்றும் கவுண்டிங்’ என குறிப்பிட்டு அது எப்போதும் ஆண்டனி கீர்த்தி AntoNY x KEerthy ( Iykyk) என்று பதிவிட்டுள்ளார். மேலும், உங்களுக்கு தெரிந்தால் உங்களுக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலமாக இத்தனை ஆண்டுகளாக மூடி மறைத்த தன்னுடைய காதலை, இன்று கீர்த்தி சுரேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இனி, வேறென்ன.. கீர்த்தி – ஆண்டனி திருமணம் டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெறும் என்ற அழைப்பிதழ் வரவிருக்கிறது.