Pushpa 2

நேற்றைய-இன்றைய-நாளைய காதல் குறித்து, கிருத்திகா உதயநிதி கருத்து

நேற்றைய காதல், இன்றைய காதல், நாளைய காதல் குறித்து, இயக்குனர் கிருத்திகா உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார். அது குறித்துக் காண்போம்..

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படம் ரொமான்டிக் ஜானரில் உருவாகியுள்ளது. நித்யா மேனன் லீட் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

‘ரெட் ஜெயண்ட்’ தயாரித்த இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, காதல் குறித்தும் பேசியுள்ளார்; ‘தனது அப்பா -அம்மா தலைமுறையில் இருந்த காதல், தங்களுக்கு வந்த காதல், அடுத்ததாக தன்னுடைய மகன் தலைமுறையின் காதல் என அனைத்துமே மாறிக்கொண்டே இருப்பதாக’ அவர் கூறியுள்ளார். அது ஏன் என யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இனிவரும் அடுத்த தலைமுறை, கல்யாணம் வரைக்குமாவது போவார்களா என்று சந்தேகமாக உள்ளதாகவும்’ கூறியுள்ளார்.

முன்னதாக வணக்கம் சென்னை, காளி படங்களுடன் ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் தொடரையும் இவர் இயக்கியுள்ளார்.

தற்போது, ஜெயம் ரவிக்கு சைரன், பிரதர் என வெளியான படங்கள் அவருக்கு பேர் சொல்லும்படி அமையவில்லை. இச்சூழலில், காதலைப் பேசும் இந்த திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். இணையதளவாசிகளும் ஆவலாய் காத்திருக்கின்றனர்.