சினிமாவை விட, நிஜ வாழ்க்கையில் அருமையாக நடிக்கிறார்கள்: சூர்யா-ஜோதிகா பற்றி இணையதள கருத்துகள்
‘கங்குவா’ படத்தின் தோல்விக்கு பிறகு, சூர்யா-ஜோதிகா நட்சத்திர தம்பதிகள் தற்போது கோயில் கோயிலாக சென்று வழிபாடு செய்வது குறித்து, இணைதளவாசிகள் வெளியிடும் கருத்துகள் வைரலாகி வருகின்றன. இது குறித்த விவரம் பார்ப்போம்..
‘நடிகை ஜோதிகா, ‘இந்து கோயில்களுக்கு செலவு செய்யும் பணத்தை பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யலாம்’ என சொன்னது தான் இந்த சர்ச்சைக்கே காரணம் என பஞ்சாயத்து கிளம்பிய நிலையில் தான், அவர் கோயிலுக்கு சென்று கொண்டிருக்கிறாரா? என்கிற கேள்வியை நெட்டிசன் ஒருவர் எழுப்பினார். அதனை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ளார்.
‘கங்குவா’ படம் வெளியாகி தோல்வியை தழுவிய நிலையில், தற்போது ஜோதிகா மற்றும் சூர்யா, கோயில் கோயிலாக செல்வது ஏன்? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.
அடுத்த படமாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழிபாடு நடக்கிறதா? என்றும் பேச்சுகள் கிளம்பியுள்ளன.
கோவில் உண்டியலில் பணம் போடுவதை விட, பள்ளி, மருத்துவமனைக்கு பணம் தாருங்கள் என சொல்லாமல்..
‘கோவிலுக்கு பணம் தருவதைப்போல பள்ளி, மருத்துவமனைக்கும் தாருங்கள்’ எனக் கூறி இருந்தால்.. சர்ச்சையே வந்திருக்காது. தற்போது வந்த படத்தின் தோல்விக்கு இந்த சர்ச்சை பேச்சும் முக்கிய காரணம் என்பதை உணர்ந்து, திடீரென கோவில் கோவிலாக செல்வதும், அதை ஊடகங்களுக்கு தெரிவிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், ‘நான் அன்று பேசியது தவறு’ என பகிரங்கமாக ஒப்புக்கொள்ள மட்டும் ஈகோ தடுக்கிறது. ஒருவேளை, இந்தப்படம் ஜெயித்திருந்தால்.. இந்த திடீர் பக்தியும், அதை விளம்பரப்படுத்தும் யுக்தியும் வந்திருக்காது. சினிமாவை விட நிஜ வாழ்க்கையில் இவர்கள் அருமையாக நடிக்கிறார்கள்.
மக்களையும், கடவுளையும் ஏமாற்ற நினைப்பது உண்மையான பக்தியாகாது. ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல புரோமோசனில் அளவுக்கு அதிகமாய் பேசியது முதல், தற்போதைய திடீர் ஆன்மீகப் பற்று வரை எல்லாமே நாடகம். எதுவுமே மக்களிடம் எடுபடாது.
“தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதும், உண்மையான மனமாற்றம் வந்து கடவுளை வணங்குவதும் மட்டுமே ஒரே தீர்வு” என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு, ஜோதிகா மற்றும் சூர்யா ரசிகர்கள் இணையத்தில் விளக்கம் அளித்து வந்தாலும், சூர்யா-ஜோதிகா விளக்கத்தையும் எதிர்பார்த்து நிற்கின்றனர்.