Keerthi Suresh Thanks to Fans
Keerthi Suresh Thanks to Fans

சின்ன வயசுல கொழுகொழுன்னு குண்டா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Keerthi Suresh Thanks to Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது இந்தியிலும் ஒரு படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

மருத்துவமனையில் தான் அஜித்திடம் கதை சொல்லி சம்மதம் வாங்கினேன் – சூப்பர் ஹிட் பட இயக்குனர் சொன்ன ரகசியம், என்ன படம் தெரியுமா?

நேற்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்களுக்கு பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வந்தனர்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷின் மோகன்லாலின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வீடியோ மூலமாகவும் மோகன்லாலுக்கு வாழ்த்து கூறியுள்ளார். சிறுவயதில் மோகன்லாலுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

https://www.instagram.com/p/CAdHJkDluGE/?igshid=lfont7gue0f2

அதேபோல் கீர்த்தி சுரேசை இன்ஸ்டாகிராமில் பின்பற்றுவோர் எண்ணிக்கை ஐந்து மில்லியனாக உயர்ந்துள்ளது. தன்னைப் பின்பற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறியும் அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வீட்டில் தன்னுடைய செல்லமான நாய் குட்டியடன் பொழுது போக்கி வருகிறார். அந்தப் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.