Rajiv Menon About Ajith
Rajiv Menon About Ajith

மருத்துவமனையில் தான் அஜித்திடம் கதை சொல்லி சம்மதம் வாங்கியதாக சூப்பர் ஹிட் பட இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.

Rajiv Menon About Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் இதனை உற்சாகமாக கொண்டாடினர்.

பிரபலங்கள் பலரும் அஜித்திற்கு வாழ்த்து கூறி வந்த நிலையில் இயக்குனர் ராஜீவ் மேனன் அவர்களும் வாழ்த்து கூறியுள்ளார்.

அஜித்திற்கு கிடைத்த மிக பெரிய கெளரவம்… அளவில்லா ஆனந்தத்தில் அஜித் ரசிகர்கள் – புகைப்படத்தை பாருங்க.!

மேலும் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் குறித்த ரகசியம் ஒன்றை கூறியுள்ளார்.

அதாவது இந்தப் படத்தில் முதலில் பிரசாந்த் தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அவர் தனக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்க வேண்டும் அது தான் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதனால் இந்த கதாபாத்திரம் அஜித்திற்கு சென்றுள்ளது. நான் இந்த கதையை கூறும் போது அஜித் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அங்கு தான் கதையை கூறி சம்மதம் வாங்கினேன் என கூறியுள்ளார்.