மூன்று பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை காவியா அறிவுமணி.

Kavya Arivumani in Upcoming Movies : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்தார். இதனையடுத்து தற்போது அந்த கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்து வருகிறார்‌. ‌

மூன்று பிரபல நடிகர்களுக்கு ஜோடியான காவியா அறிவுமணி.. அந்த நடிகர்கள் யார் யார் தெரியுமா??

இவருக்கு வெள்ளித்திரையிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. முதலில் பிரபல நடிகர் பரத்துக்கு ஜோடியாக இவர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதனை அடுத்து பிரபல நடிகரும் விஜய் டிவி பிரபலமான கவினுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மூன்று பிரபல நடிகர்களுக்கு ஜோடியான காவியா அறிவுமணி.. அந்த நடிகர்கள் யார் யார் தெரியுமா??
திருச்செந்தூர் : புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரிப்பப்பரி என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் காவியா அறிவுமணி நடிக்க ஒப்பந்தம் ஆகி வருவது ரசிகர்களை வெகுவாக மகிழ்ச்சியாக்கி வருகிறது.

சின்ன படம் எல்லாம் இப்போ ஓடல – Ashwin பட தயாரிப்பாளர் R.Ravindran உருக்கம் | Yaaro Audio Launch