தனக்குத்தானே தன்னுடைய பேச்சால் சூனியம் வைத்துக் கொண்டுள்ளார் அஸ்வின். இதனால் வாய்ப்பு பதிவு போனதுதான் மிச்சம்.

Kavin Replace Ashwin in New Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். ஏற்கனவே பல ஆல்பம் பாடல்களில் நடித்துள்ள இவர் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் அஸ்வின்.. நல்ல வாய்ப்பை தட்டி தூக்கிய விஜய் டிவி பிரபலம் - வெளியான ஷாக் தகவல்

இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது நான் நாற்பது கதை கேட்டு தூங்கிவிட்டேன். எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூக்கம் வந்துவிடும். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்ன சொல்லப் போகிறாய் தான் என கூறினார். இவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் அஸ்வின்.. நல்ல வாய்ப்பை தட்டி தூக்கிய விஜய் டிவி பிரபலம் - வெளியான ஷாக் தகவல்
மிக மோசமான கட்டத்தில் இருக்கிறோம் : பில்கேட்ஸ் எச்சரிக்கை

அதாவது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தங்களது தயாரிப்பில் அஸ்வினை வைத்து படம் ஒன்றை தயாரிக்க முன் வந்துள்ளது. இதற்காக அஸ்வினை அணுகியபோது அவர் குறிப்பிட்ட ஓட்டலில் குறிப்பிட்ட நம்பரில் வரும் போடுங்கள் அப்போதுதான் கதை கேட்பேன் என கூறியுள்ளார்.

தயாரிப்பு நிறுவனம் சரியான சொன்னபடி ரூம் போட்டு விட்டு காலையில் இருந்து மாலை வரை காத்துக் கொண்டிருந்தது. அஸ்வின் வராத காரணத்தினால் அவரை தொடர்பு கொண்டு பேசியபோது இன்னைக்கு கதை கேட்கும் மூடில் இல்லை நாளைக்கு மீட் பண்ணலாம் என கூறி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கடுப்பான தயாரிப்பாளர் அஸ்வினை வேண்டாம் என முடிவு செய்து வேறொரு நடிகரை தேர்வு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

திரை பிரபலங்கள் கலந்துகொண்ட “ROCKY” படத்தின் சிறப்பு காட்சி..! | Sathyam Cinemas | Vasanth Ravi | HD

அந்த நடிகர் வேறு யாருமில்லை விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த கவின் தான். இதனால் தன்னுடைய வாயால் தானே தன்னுடைய வாய்ப்பை எடுத்துக் கொண்டுள்ளார் அஸ்வின் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.