காத்தோடு காத்தாக பாடல் 18 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.

Kathodu Kathaga Song Record : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வசந்த பாலன். ஆல்பம் வெயில் அங்காடித்தெரு அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்ட இவர் தற்போது ஜெயில் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

காத்தோடு காத்தானேன் பாடல் படைத்த சாதனை.. நன்றி தெரிவித்த இயக்குனர் வசந்தபாலன்

இந்த படத்தில் விஜய் பிரகாஷ் நாயகனாக நடிக்க எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதி நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து காத்தோடு காத்தானேன் என்ற பாடல் கடந்த வருடம் வெளியாகி இருந்தது. இதனை அதிதி பாலன் மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

தற்போது இந்த பாடல் 18 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது. வெற்றிப் பாடலாக மாற்றிய 18 மில்லியன் பார்வையாளர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.