நெஞ்சை பதைக்கும் கரூர் சம்பவம்.. பிரபலங்களின் இரங்கல்.!!

நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இரண்டு மாநாடுகள் முடிந்த நிலையில் தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் நாமக்கலில் முடித்துவிட்டு கரூரில் பிரச்சாரத்தை விஜய் தொடங்கியிருந்தார் இவரை காண பல்லாயிரம் கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கி 39 பேர் ப*யாகி இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 10 குழந்தைகளும் 16 பெண்களும் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றன.
கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன்.
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்.
நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் . 😭— G.V.Prakash Kumar (@gvprakash) September 27, 2025
நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.
நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும்,…
— Kamal Haasan (@ikamalhaasan) September 27, 2025
கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறையவைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியும் அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் இறைவன் கருணையால் விரைவில் முழு நலம் பெற வேண்டுகிறோம்.…
— Actor Soori (@sooriofficial) September 28, 2025
#கரூர் பெரும் துயரம் நெஞ்சை பதற வைக்கிறது!
தவெக தலைவர் @actorvijay அவர்களின்
பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களை பற்றி அறிந்து
பெரும் அதிர்சியும்
மன வேதனையும்
அடைகிறேன்! பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னுடைய
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!— pa.ranjith (@beemji) September 27, 2025
Utter nonsense. Hearing that more than 30 people including children losing their lives over a stampede in actor/politician Vijay’s rally is heartwrenching and totally not right.
My heart goes out to every one of those innocent victims and my deepest condolences to every one of…
— Vishal (@VishalKOfficial) September 27, 2025
