வாடிவாசல் படத்தில் உதவி இயக்குனராக இணைந்துள்ளார் பிரபல நடிகர்.

Karunas in Vadivasal Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக பாலா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகிறது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

வாடிவாசல் படத்தில் உதவி இயக்குனராக இணைந்த பிரபல நடிகர்.. வெளியான அதிரடி அறிவிப்பு

ஜல்லிக்கட்டு மற்றும் வடமாநில வாழ்வு குறித்த கதை களத்தை கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளது. தற்போது இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இணைந்துள்ளார் கருணாஸ்.

இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வாடிவாசல் படக்குழுவுக்கு நன்றி கூறியுள்ளார். ராமனுக்கு அணிலாக இருப்பதைப் போல இந்த படத்தில் நானே வெற்றிமாறனுக்கு அணிலாக இருந்து உதவி புரியவில்லை. உதவி இயக்குனராக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. தற்போது அதற்கு வாடிவாசலே வாசலைத் திறந்து விட்டுள்ளது.

போலி வியாபார அரசியலை புறம் தள்ளிவிட்டு இனி கலைத்துறையில் பயணத்தை தொடர உள்ளேன் என்று கூறியுள்ளார். பல படங்களில் ஹீரோ, காமெடியனாக நடித்த கருணாஸ் தற்போது உதவி இயக்குனராக புதிய அவதாரம் எடுப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

வாடிவாசல் படத்தில் உதவி இயக்குனராக இணைந்த பிரபல நடிகர்.. வெளியான அதிரடி அறிவிப்பு