விருமன் பட பூஜையில் இரண்டு கேள்விகளை கேட்டு சூர்யா மற்றும் கார்த்தியை திணற வைத்துள்ளார் அதிதி சங்கர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் விருமன்.

விருமன் பட பூஜையில் இரண்டே கேள்வியால் சூர்யா மற்றும் கார்த்தியை திணற வைத்த அதிதி ஷங்கர் - அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

நடிகர் கார்த்தி அதிதி சங்கர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை பிஜி முத்தையா இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய கார்த்தி அதிதி சங்கர் படத்தின் பூஜையில் கேட்ட இரண்டு கேள்விகள் குறித்து பேசி உள்ளார்.

அதாவது படத்தின் பூஜையில் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்க என சொல்லி உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடு எது என கேட்க கார்த்தி இன்டர்நேஷனல் லெவலில் யோசித்துள்ளார். ஆனாலும் பதில் தெரியாமல் அதிதியிடம் இதுகுறித்து கேட்க அவர் பங்களாதேஷ் இங்கு தான் பங்களா அதிகம் உள்ளது என கூறியுள்ளார்.

விருமன் பட பூஜையில் இரண்டே கேள்வியால் சூர்யா மற்றும் கார்த்தியை திணற வைத்த அதிதி ஷங்கர் - அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

அதோட நிறுத்தாமல் இன்னொரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க என கேட்க ஒரு பொண்ணு அவங்க அப்பாவ தள்ளி விட்டுடா அந்த பொண்ணோட பேர் என்ன என கேட்டேன் கார்த்தி மட்டுமல்லாமல் சூர்யாவும் சேர்ந்து இந்த கேள்விக்கு பதில் கூற முயற்சி செய்தும் முடியாமல் போக அது இதற்கு பதில் புஷ்பா என கூறியுள்ளார். அதாவது புஷ் என்றால் தள்ளி பா என்றால் அப்பா என தெரிவித்துள்ளார்.

அதிதியின் இந்த கேள்விகளைப் பற்றி பேசி அவரை பங்கமாக கலாய்த்து உள்ளார் கார்த்தி.