Karnan Telungu Remake Update

தெலுங்குவில் கர்ணன் திரைப்படம் ரீமேக் ஆக இருப்பதாகவும் அதில் ஹீரோவாக நடிக்கும் நடிகர் குறித்தும் தெரியவந்துள்ளது.

Karnan Telungu Remake Update : தமிழ் சினிமாவை மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வசூலை பெற்றது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் கர்ணன் திரைப்படத்தை பாராட்டி வந்தனர்.

தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் கைப்பற்றியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக அவருடைய மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தினை இயக்க போவது யார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.