Kanimozhi slams
Kanimozhi slams

Kanimozhi slams – ராமநாதபுரம்: நாட்டின் காவல்காரன் என்று சொல்லும் மோடியின் ஆட்சியில் ஆண்டுக்கு இதுவரை 21,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளது என கனிமொழி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து, மூக்கையூர் சந்திப்பில் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அதில் கலந்து கொண்ட தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி பேசுகையில்: விளம்பரச் செலவுக்காக மக்களின் வரிப்பணத்தில் நான்காயிரம் கோடி செலவு செய்துள்ள நம் பிரதமர் மோடி .. மழை வெள்ளத்திற்கு நிவாரணம் வழங்கமாட்டார் என மோடி குறித்து குற்றம் சாட்டினார்.

மேலும் விவசாயிகளின் மொத்த கடன் தொகையான 72 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்யாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் தொகையை பிரதமர் மோடி தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளார் என ஆவேசமாக பேசியுள்ளார்.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 1,050 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இவ்வாறு மோடி ஆட்சி துவங்கியதில் இருந்து நாட்டிற்க்கு எந்த பயனும் இல்லை விலைவாசியே அதிகரித்து உள்ளது.

எனவே மத்திய அரசையும், மாநில அரசையும் இந்த தேர்தலோடு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கனிமொழி மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.