Kangana Ranaut Salary
Kangana Ranaut Salary

Kangana Ranaut Salary – ஜெயலலிதாவாக நடிக்க கங்கானாவிற்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் ஒட்டு மொத்த திரையுலகையும் தலை சுத்த வைத்துள்ளது.

தமிழக அரசியலில் மிக பெரிய பெயரையும் புகழையும் எடுத்தவர் புரட்சி தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா. இவரது மறைவிற்கு பிறகு பல இயக்குனர்கள் இவரின் வாழ்க்கையை படமாக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே iron Lady என்ற பெயரில் இப்படம் உருவாகி வருகிறது, அதில் நித்யா மேனன் ஜெயாவாக நடிக்கிறார். மேலும் ஏ.எல் விஜய் தலைவி என்ற பெயரில் படமாக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவருக்கு சம்பளமாக ரூ 24 கோடி பேசப்பட்டுள்ளதாம். தமிழ் சினிமாவில் ஒரு நடிகைகளுக்கு இவ்வளவு பெரிய சம்பளம் கொடுக்கப்படுவது இதுவே முதல் முறை.

காரணம் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும் பரவாயில்லை கங்கனா நடித்தால் நிச்சயம் இந்த படம் ஹிட்டாகி விடும் என படக்குழுவும் தயாரிப்பு நிறுவனமும் வைத்துள்ள நம்பிக்கை தானாம்.