மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி நேராக பிக் பாஸ் வீட்டுக்குள் கமல்ஹாசனும் சென்றிருந்த நிலையில் அது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் கேட்டுள்ளார்.

KamalHaasan Health Issue Controversy : இந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். இவர் படங்களில் நடித்து வருவது மட்டுமல்லாமல் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இவர் அமெரிக்கா சென்று வந்ததை அடுத்து இவருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் ஒரு வாரம் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கொரானாவில் இருந்து பூரண குணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் 4ஆம் தேதி முதல் தனது வழக்கமான பணிகளை தொடர்வார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

அது ரெம்ப மோசமான ஆட்டம் : கங்குலி கருத்து

கமலும் டிஸ்சார்ஜ் ஆன கையோடு நேராக பிக்பாஸ் செட்டுக்கு சென்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதே கொரோனா விதிமுறை மீறல் என சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மீண்டு வந்தாலும் ஒரு வாரம் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் கமல்ஹாசன் அதற்கு மாறாக நடந்து கொண்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏழு படம் நடிச்சு முடிச்சுட்டேன் – எல்லாரையும் கலாய்த்து தள்ளிய Pugazh | #EnnaSollaPogiraiAudioLaunch