பிக் பாஸ் சீசன் 5-க்கு கமல்ஹாசன் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Kamal Salary for BB5 : தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஜாம்பவானாக வலம் வருபவர் கமல்ஹாசன். தமிழ்த் திரையுலகில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தவர். தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியவர் எனக் கூறலாம்.

தேர்தலில் தோல்வி, பிக் பாஸ் சீசன் 5 சம்பளத்தை உயர்த்திய கமல்ஹாசன் - எவ்வளவு வாங்கப் போகிறார் தெரியுமா??

தமிழ் சினிமாவின் பல்வேறு சாதனைகளைப் படைத்த கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தடம் பதித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நான்கு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய உலக நாயகன் கமல்ஹாசன் ஐந்தாவது சீசனுக்காக ரூபாய் 50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இந்த சீசன் ஒளிபரப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.