Kajal Aggarwal Marriage Announcement
Kajal Aggarwal Marriage Announcement

அக்டோபர் 30ல் தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Kajal Aggarwal Marriage Announcement : தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். மேலும் இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி கௌதம் கிச்சலு என்பவருடன் தனக்கு மும்பையில் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.