kaithi

கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள கைதி திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதால் நல்ல வசூலை பெற்று வருகிறது.

தீபாவளி விருந்தாக கடந்த 25ம் தேதி விஜய் நடிப்பில் பிகிலும், கார்த்தி நடிப்பில் கைதியும் வெளியானது. இதில், பிகில் திரைப்படம் விஜய் ரசிகர்களை கவர்ந்ததே தவிர பொதுவான ரசிகர்களை கவரவில்லை என்கிற விமர்சனம் பலராலும் முன் வைக்கப்பட்டது. எனவே, தொடக்கத்தில் இப்படத்திற்கு கிடைத்த வசூல் போகப்போக குறையத் துவங்கியது.

சென்னையில் மட்டும் முதல் நாள் ரூ.1.79 கோடியும், 2ம் நாள் ரூ.1.73 கோடியும், 3 நாள் ரூ.1.74 கோடியும், 4ம் நாள் ரூ.1.72 கோடியும், 5ம் நாளான நேற்று இப்படம் ரூ.84 லட்சத்தையும் இப்படம் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

kaithi2

அதேநேரம் கைதி திரைப்படம் பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால், குறைவான தியேட்டர்களில் வெளியிடப்பட்டிருந்த இப்படத்திற்கு தற்போது தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு நல்ல வசூலை பெற்று வருகிறது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான கைதி திரைப்படம் ரூ.51 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது. கடந்த 5 நாட்களில் கைதி திரைப்படத்தின் வசூல் படிப்படியாக அதிகரித்து இரட்டிப்பு வசூலை பெற்று வருகிறது.

5ம் நாளான நேற்று இப்படம் தமிழகத்தில் ரூ.4.15 கோடி வசூல் செய்திருப்பதாகவும், மொத்தமாக இதுவரை ரூ.20 கோடி வசூல் ஈட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இப்படம் நல்ல வசூலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.