Kadambur Raju Praised Thala Ajith Contribution
Kadambur Raju Praised Thala Ajith Contribution

தமிழக அமைச்சர் ஒருவர் தல அஜித்தை பாராட்டி கமலை விமர்சனம் செய்துள்ளார்.

Kadambur Raju Praised Thala Ajith Contribution : சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்களிடம் தங்களால் இயன்ற நிதி உதவியை நிவாரண நிதியாக அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Ajith அரசியலுக்கு வந்தால் சரியா? தவறா? – Minister Rajendra Balaji Open Talk!

முதல்வரின் கோரிக்கையை ஏற்று சிவகார்த்திகேயன் 15 லட்சம் நிதி அளித்திருந்தார். அவரை தொடர்ந்து தல அஜித் மத்திய அரசிற்கு 50 லட்சமும் மாநிலத்துக்கு 50 லட்சமும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் நிதியாக அளித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அஜித்தின் இந்த செயலை பாராட்டியுள்ளார். மேலும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளை விமர்சித்து பேசி பேசி வரும் கமல்ஹாசனை விமர்சனம் செய்துள்ளார். உங்களிடம் நல்ல ஆலோசனை இருந்தால் கூறுங்கள் விமர்சனம் செய்வதற்கான நேரம் இதுவல்ல என கூறியுள்ளார்.

மேலும் அஜித்தை போலவே மற்ற நடிகர்களும் மக்களுக்கு உதவ முன் வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Kadambur Raju Praised Thala Ajith Contribution
Kadambur Raju Praised Thala Ajith Contribution