ரசிகர்கள் மத்தியில் காத்துவாக்குல 2 காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Kaathu Vakkula Rendu Kadhal First Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அடுத்ததாக பல்வேறு திரைப் படங்கள் வெளியாக உள்ளன. அப்படி இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்றுதான் காத்துவாக்குல 2 காதல்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இந்த படத்தினை இணைந்து தயாரித்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது அனிருத்திற்கு 25வது திரைப்படமாகும்.

மேலும் இந்த படத்திற்கு எஸ் ஆர் கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர். ஸ்ரீகர் பிரசாத் படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.