சூரரைப் போற்று படம் கொடுத்த தைரியத்தால் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள காமெடி நடிகர் காளி வெங்கட்.

Kaali Venkat As Hero : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சூரரை போற்று.

சூரரைப் போற்று படம் கொடுத்த தைரியம்.. ஹீரோவாக அவதாரம் எடுத்த காமெடி நடிகர்

சுதா கொங்கரா இயக்கிய இந்தப் படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தவர் காளி வெங்கட். இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. சூரரைப் போற்று படம் கொடுத்த வெற்றியால் தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை அமலாபாலின் ஆடை படத்தைத் தயாரித்த விஜி சுப்பிரமணியம் தயாரிக்கிறார். இந்த படத்தில் மெட்ராஸ் பட புகழ் பிரித்விகா நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.