விஜய், ரஜினி மாதிரி அஜித் கிடையாது எனவும் வலிமை திரைப்படம் நேரடியாக OTTயில் வெளியாக வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பேசியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன்.

K Rajan About Ajith and Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத சூழ்நிலையில் இந்த படம் தியேட்டரில் வெளியாகுமா அல்லது OTT ரிலீஸா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு, இன்று பிரதமர் மோடி விருந்து

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான கே ராஜன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் வலிமை திரைப்படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறியுள்ளார். ரஜினி விஜய் போல அஜித் கிடையாது. கொஞ்சம் புகழ் கிடைத்ததில் சம்பளத்தை உயர்த்துபவர் அஜித் இல்லை. ‌‌ திருப்திகரமான சம்பளத்தை மட்டுமே அவர் வாங்கிக் கொள்வார். ஆடம்பரத்தை அதிகம் விரும்பாதவர் என கூறியுள்ளார்.

விஜய்யின் Beast Netflix-ல் ரிலீஸ் ஆகிறதா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.