அபிராமியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Julie Evictied From BB Ultimate : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

அபிராமியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவுக்கு வரவுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கிய இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் விலகிக்கொள்ள தற்போது அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அபிராமி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அவரைத் தொடர்ந்து ஜூலியும் வெளியேற்றப்பட்டுள்ளார். முதல் சீஸனில் கெட்ட பெயர் எடுத்த ஜூலி மூன்றாவது சீஸனில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் அவர் வெளியேற்றப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அபிராமியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி

டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக இருக்க அனைத்து தகுதியும் ஜூலிக்கு உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வின்னராக டைட்டிலை வெல்வதற்கு பாலாஜி முருகதாஸ்க்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.