பிஸ்தா படத்தின் ஐந்து பாடல்கள் அடங்கிய jukebox வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிரிஷ். இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் உருவாகி அக்டோபர் ஏழாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள திரைப்படம் தான் பிஸ்தா.

வெளியானது ஐந்து பாடல்கள் அடங்கிய பிஸ்தா படத்தின் Jukebox

மிருதுளா முரளி, அருந்ததி நாயர், சதீஷ் செந்தில் யோகி பாபு என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடிக்க எம் ரமேஷ் பாரதி இந்தப் படத்தை இயற்றியுள்ளார். ஒன் மேன் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக புவனேஸ்வரி சம்பாசிவம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

எம் விஜய் ஒளிப்பதிவு செய்ய தருண் குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குனர் எம் ரமேஷ் பாரதி உட்பட யுகபாரதி மற்றும் ஆர் ஜே விஜய் உள்ளிட்டோர் இந்த படத்திற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளனர். ஏற்கனவே படத்திலிருந்து ஒவ்வொரு பாடல்களாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் jukebox வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வெளியானது ஐந்து பாடல்கள் அடங்கிய பிஸ்தா படத்தின் Jukebox

இந்த படத்தில் அழகுல ராசாத்தி, என்னை கொல்ல வந்த, ஆத்தாடி பார்த்தேனே, நான் என்ன பாவம் மற்றும் வா வா என மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Pistha - Audio Songs Jukebox | Metro Shirish, Mrudula Murali | Dharan Kumar | Ramesh Baarathi