கொரானாவால் பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி காலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Joker Thulasi Passes Away : தமிழ் சினிமாவில் மருதுபாண்டி என்ற படத்தின் மூலமாக 1990இல் திரையுலகில் அறிமுகமானவர் ஜோக்கர் துளசி. இதற்கு முன்னதாக இவர் சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.

கொரானாவால் பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி காலமானார் - வெளியான அதிர்ச்சித் தகவல்

வெள்ளித்திரையில் மருதுபாண்டி, உடன்பிறப்பு, தமிழச்சி, இளைஞரணி, அவதார புருஷன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. சின்னத்திரையில் கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி உள்ளிட்ட சன் டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.

1976-ம் ஆண்டு பிறந்த இவர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.