ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்ற சிவாவை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது அந்த நிர்வாகத்தினர் அவரை சுற்றி வளைத்துள்ளனர்.

Jiiva in Mauritius Hotel : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் வெளியான கொரில்லா, ஜிப்ஸி உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் இவர் மிர்ச்சி சிவா உடன் இணைந்து கலகலப்பு 2 படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சிவாவுடன் இணைந்து கோல்மால் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

புத்தாண்டையொட்டி, நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை : அமைச்சர் தகவல்

இந்த படத்தின் படப்பிடிப்பு மொரிஷியஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்ற படக்குழுவினர் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்துள்ளனர். ஷூட்டிங்கை முடித்துவிட்டு இவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்ற போது ஹோட்டல் நிர்வாகத்தினர் இன்னும் பணம் செலுத்தவில்லை என இவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.

Daakko Daakko Meka (Telugu) Full Video Song |Pushpa Songs |Allu Arjun, Rashmika |DSP |Sivam |Sukumar

மனோபாலா உட்பட சில நடிகர்கள் மட்டும் எப்படியோ அங்கிருந்து தப்பி விட்டனர். அதன் பின்னர் படத்தின் தயாரிப்பாளர் ஹோட்டலுக்கு செலுத்த வேண்டிய கட்டண பாக்கியை செலுத்திய பின்னர் தான் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.