Jayalalithaa

Jayalalithaa BioPic : ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார் விஜய். அதற்கான டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகையாக தமிழக அரசியலில் இரும்பு மனுஷியாக விளங்கியவர் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா.

இவரது மறைவை தொடர்ந்து இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே iron lady என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் நித்யா மேனன் ஜெயலிதாவாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது விஜயும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கையில் எடுத்துள்ளார்.

ஜெயலிதாவின் பிறந்த நாளான இன்று அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளார். படத்திற்கு தலைவி என பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமாகியுள்ளார். Vibri மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் ஜெயலலிதாவாக யார் நடிப்பார்? என்ற எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.