banner
சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான பேனர் மற்றும் மற்ற பேனர்களை வைப்பதற்காக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மாநகராட்சி ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறும் ஆடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது.

Jayagopal paid bribe to kept the banner in pallikarani – சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணை சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று கீழே விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம்பெண் பரிதாபமாக பலியானார். இதற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் அதிகமாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என அனைத்து கட்சியினரும் கூறிவிட்டனர். அதோடு சாலையில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். ஆனால், நெஞ்சுவலி எனக்கூறி ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், பள்ளிக்கரணை காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஜய் என்பவருடன் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், பேனர் வைப்பதற்காக மாநகராட்சி ஊழியர்களுக்கு தலா ரூ.1000 வழங்கினேன் என ஜெயகோபால் தன்னிடம் கூறியதாக பாஸ்கர் கூறுவது பதிவாகியுள்ளது.

அதேபோல், அனுமதி பெற்று பேனர் வைக்குமாறு கூறிய மாநகராட்சி ஊழியர்களை ஜெயகோபால் திட்டியதும், அனுமதி வங்கி விட்டேன் என கூறிய ஜெயகோபாலிடம் அதற்கான சான்றிதழை காட்ட சொன்னபோது ‘முடியாது’ என கூறி தங்களை மிரட்டியதாக ஒப்பந்த ஊழியர்கள் கூறுவது அந்த ஆடியோ மூலம் தெரியவந்துள்ளது.