வீட்டில் தனது குளியல் அறைக்கு பூட்டு கிடையாது என்பதை பற்றி பகிர்ந்திருக்கும் ஜான்வி கபூர் வீடியோ வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜான்விகபூர். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் அவரது தாயும் மறைந்த முன்னணி நடிகையுமான ஸ்ரீதேவி சென்னையில் வாங்கியுள்ள வீட்டை Vogue பத்திரிக்கைக்கு சுற்றி காட்டியுள்ளார். மேலும் அவர்களிடம் அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளையும் காட்டி ஜானகி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் தனது குளியலறையை காட்டி இதற்கு பூட்டு கிடையாது என்று கூறியுள்ளார். ஏனெனில் நான் குளியலறைக்கு சென்று பசங்களுடன் பேசுவேன் என்று பயந்து என் அம்மா பூட்டு போட மறுத்து விட்டார் என்று கூறியிருக்கிறார். இதன் வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

YouTube video