அரசியல் ஆடுகளம்: ‘ஜனநாயகன்’ படத்தை எதிர்கொள்ள ‘பராசக்தி’ பராக் பராக்

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமை விற்பனையான நிலையில், இப்படம் குறித்த அரசியல் சடுகுடு பார்ப்போம்..
விஜய்யின் 69-வது படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜு, கெளதம் மேனன், பாபி தியோல், டீஜே அருணாச்சலம் என பலர் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.
விஜய்யின் கடைசி படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசியல் பேசும் இப்படம், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் ஜனநாயகம் விழிப்புணர்வுடன் இருப்பது மிக முக்கியம்’ என்பதை முழங்குவதாக காட்சிகள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப கொள்கைப் பாடல்களும் பிரச்சார பாணியில் தயாராகி வருவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், 2026-ல் சட்டசபைத் தேர்தலும் சூடு பிடிக்க இருப்பதால், ‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக களமிறக்க, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படம் ரெடியாகி வருவதாக கூறப்படுகிறது.
இச்சூழலில் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.121 கோடிக்கு வாங்கியுள்ளது. அவ்வகையில், இப்படம் ரிலீஸாகி 2 மாதங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகிறது.