ஜகமே தந்திரம் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jagame Thanthiram Trailer Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகி அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்றாக உள்ளது.

போடு ரகிட‌ ரகிட.. ஜகமே தந்திரம் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு - தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்.!!

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வரும் ஜூன் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது வரும் ஜூன் ஒன்றாம் தேதி இதன் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.