மற்ற படங்களை விட வேகமான படமாக இருக்கும்.. அரசன் குறித்து அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்..!

Web Ads

மற்ற படங்களை விட வேகமான படமாக இருக்கும் என அரசன் படம் குறித்து வெற்றிமாறன் பேசியுள்ளார்.

It will be a faster film than other films.. Vetimaaran gave an update on the Arasan
It will be a faster film than other films.. Vetimaaran gave an update on the Arasan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியது இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் வடசென்னை கதை களத்தில் கேங்ஸ்டர் திரைப்படம் ஆக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது

மேலும் விஜய் சேதுபதி கிஷோர் சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை பற்றி மாறன் பகிர்ந்துள்ளார் அதாவது இந்த முறை நான் கதை எழுதினேன் பிறகுதான் படப்பிடிப்புக்கு சென்றேன் என்று பேசியுள்ளார் இது மட்டுமில்லாமல் இது எனது மற்ற படங்களை விட வேகமான படமாக இருக்கும் என்றும் சில நாட்களில் சில காட்சிகளை வெளியிட முடியும் என்றும் அதுவரை நாங்கள் அதை வைத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் இயக்குனர் ராம் அவர்கள் அரசன் திரைப்படம் வெற்றிமாறனின் முதல் கதை என்றும் இந்த கதை பொல்லாதவனுக்கு முன்பே வெற்றிமாறன் எழுதினார் என்றும் சொல்லி இருக்கிறார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

It will be a faster film than other films.. Vetimaaran gave an update on the Arasan
It will be a faster film than other films.. Vetimaaran gave an update on the Arasan