IPL cricket betting issue - Sreesanth tells Supreme Court
IPL cricket betting issue - Sreesanth tells Supreme Court

IPL cricket betting issue – Sreesanth tells Supreme Court – ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக தொடுக்கப்பட்ட ஆயுள் கால தடை மிகவும் கடுமையானது என ஸ்ரீ சாந்த் கூறி உள்ளார்.

ஸிபாட்பிக்சிங் சூதாட்ட வழக்கில் ஸ்ரீ சாந்த் உள்ளிட்டோருக்கு விடுவித்து டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து தன் மீதான ஆயுட்கால

தடையை நீக்க கோரி ஸ்ரீ சாந்த் பி.சி.சி.ஐ-யிடம் முறையிட்டு உள்ளார். ஆனால், இதை கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

இதை அடுத்து ஸ்ரீ சாந்த் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் மீதான தடையை நீக்கி தனி நீதிபதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பி.சி.சி.ஐ கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதனால், மீண்டும் தடை நீடிக்கப்பட்டது.

ஸ்ரீ சாந்த் சார்பாக வக்கீல் கூறியது : “இங்கிலாந்தில் உள்ள கிளப் போட்டியில் விளையாட ஸ்ரீ சாந்த்க்கு அழைப்பு வந்துள்ளது. அவருக்கு தற்போது 35 வயதாகிறது.

ஆயுள் கால தடையை நீக்கினால் அவரால் விளையாட முடியும். அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் கால தடை மிகவும் கடுமையானது.

சூதாட்ட வழக்கில் இருந்து அவரை டெல்லி ஐகோர்ட் விடுவித்து இருந்தது.

இதனால் அவரை இங்கிலாந்து கிளப்பில் விளையாட அனுமதிக்க வேண்டும்.” என்று ஸ்ரீ சாந்த் வக்கீல் வாதாடினர்.

பி.சி.சி.ஐ. சார்பில் வக்கீல் சரியான ஆதரங்களுடனே ஸ்ரீ சந்தை கிரிக்கெட் வாரியம் நீக்கி இருப்பதாக வாதாடினர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த அப்பீல் வழக்கை விசாரிக்க ஜனவரி 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்து உள்ளது.