Indian 2 Shooting Spot Accident
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Indian 2 Shooting Spot Accident : உலக நாயகன் கமல்ஹாசன் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2.

இந்த படத்தில் காஜல் அகர்வால், சதிஷ், சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், விவேக் மற்றும் பலர் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு சென்னையில் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் நேற்றிரவு செட் அமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு இருந்த போது க்ரேன் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கோர விபத்து திரையுலகில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.