Indian 2 Shocking Update
Indian 2 Shocking Update

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேற முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Indian 2 Shocking Update : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகள் தொடங்கிய உடனே கமல்ஹாசன் முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்குகியதால் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டது.

இதன் காரணமாக படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டு வந்தது. அதன் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்த நிலையில் கிரேன் அறுந்து விழுந்த விபத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்த ரஜினி? இதுதான் கடைசி படமா? – வெளியான ஷாக் தகவல்

இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் படத்தின் பட்ஜெட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பட்ஜெட்டை குறைக்குமாறு தயாரிப்பு நிறுவனம் சங்கரை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமான சங்கர் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கனவே இப்படம் கைவிடப்பட்டதாக வைரலான வதந்தி போல இதுவும் ஒரு வதந்தியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

உண்மை என்ன என்பதை படக்குழு தான் உறுதிப்படுத்த வேண்டும்.