18 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் நேருக்கு நேராக மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். சிவாஜி கணேசன் எம்ஜிஆருக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்த நடிகர்கள் இவர்கள்தான்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது முன்னணி நட்சத்திரங்களாக அஜித் விஜய் இருந்து வந்தாலும் இவர்களுக்கும் இன்னமும் மவுசு குறையாமல் இருந்து வருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டில் ரஜினி நடிப்பில் சந்திரமுகி கமல் நடிப்பில் மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.

சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் மும்பை எக்ஸ்பிரஸ் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. அதன் பிறகு 18 வருடங்களாக இருவரது படங்களும் நேருக்கு நேராக மோதவில்லை.

இப்படியான நிலையில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 மற்றும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்கள் நேருக்கு நேராக மோத இருப்பதாக தெரியவந்துள்ளது. 18 வருடங்களுக்குப் பிறகு இருவரின் படங்கள் மோத இருப்பதால் இந்த மோதலில் ஜெயிக்கப் போவது யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.