India Series
India Series

India Series – நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெற்று உள்ளது.

அதனை தொடர்ந்து இன்று ராஞ்சியில் நடக்க இருக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. அதனை எதிர் கொள்ளும் வகையில் தயாராகவே உள்ளதாக ஆஸ், அணி தெரிவித்து உள்ளது.

மேலும் இந்த போட்டி தோனி அவர்களின் சொந்த ஊரில் நடக்க இருப்பதால் தோனி அவர்களிடம் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை கொண்டு உள்ளனர்.

எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத அளவுக்கு டோனிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவரது அனைத்து செயல்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடைபெறும் 3-வது ஆட்டம் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடக்கிறது. சொந்த மைதானத்தில் அவர் சாதிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

அதற்கு இன்னும் 33 ரன் தேவை. அவர் டெஸ்டில் 4876 ரன்னும், ஒருநாள் போட்டியில் 10,474 ரன்னும், 20 ஓவரில் 1617 ரன்னும் என ஆக மொத்தம் 16,967 ரன் எடுத்துள்ளார்.

ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 59 ரன் எடுத்த டோனி நாக்பூர் போட்டியில் ரன் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார்.

ராஞ்சியில் அவர் 33 ரன் எடுத்து 17 ஆயிரம் ரன்னை தொடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச போட்டியில் 17 ஆயிரம் ரன்னை தொடும் 5-வது இந்தியர் என்ற பெருமையை டோனி பெறுவார்.

தெண்டுல்கர், டிராவிட், விராட் கோலி, கங்குலி, சேவாக் ஆகியோருக்கு அடுத்த நிலையை பெறுவார்.