தனுஷின் டைரக்ஷன் பற்றி, அருண் விஜய் கருத்து..

நடிகர்கள் இயக்குநராவதும், இயக்குநர்கள் நடிகராவதும் தெரிந்ததே. அவ்வகையில் தனுஷின் இயக்கத்தில் நடித்த அருண் விஜய் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்..
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. இதில், அருண் விஜய் கலந்துகொண்டு பேசுகையில்,
‘ராயன் படம் பார்த்த பிறகு, தனுஷின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். அது இவ்வளவு சீக்கிரம் நிகழும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. தனுஷை பார்த்து நிறைய இடங்களில் வியந்திருக்கிறேன்.
நான் நிறைய இயக்குனருடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், தனுஷின் ஸ்டைல் எனக்கு வியப்பாக இருந்தது. ‘இட்லி கடை’ படம் ரசிகர்களுக்கு மட்டுமில்ல, குடும்பத்தில உள்ள ஒவ்வொருவருக்கும் பிடித்த படமாக இருக்கும்’ என்றார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக இட்லி கடை’ உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
